Pudhupattu Abathsagayeswarar Temple
Open Timings
All days : 06:30 am - 11:30 am
All days : 04:00 pm - 08:30 pm
புதுப்பட்டு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
Pudhupattu Abathsagayeswarar Temple
Open Timings
All days : 06:30 am - 11:30 am
All days : 04:00 pm - 08:30 pm
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஸ்தல புராணம்
இத் திருக்கோயில் திரேதா யுகத்தின் நாயகனான இராமபிரான் வழிபட்ட திவ்ய ஷேத்திரமாகும் . இராமபிரான் இரண்டு ஆலயங்களில் தனது திருக்கரங்களால் ஈசனை அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். அதில் ஒன்று இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி ஆலயம். மற்றொன்று நமது புதுப்பட்டு ஆபத்சகாயேஸ்வரர் ஆலயமாகும்.
இத்தலத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வில்லேந்திக்குப்பம் என்ற பகுதியில் விபண்டக மகரிஷி என்ற முனிவர் தவம் செய்து வந்தார். இராமபிரான் தனது வனவாச காலத்தில் இராவண சம்ஹாரத்திற்கு முன்பு இலக்குமனருடன் விபண்டக மகரிஷியை சந்திக்க இங்கு வருகை புரிந்துள்ளார். அப்போது இராமபிரான் தனது கோரிக்கை நிறைவேற இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை கங்கை நீரால் நீராட்டி வழிபடுவதாக வேண்டிக் கொள்கிறார். அதன் பொருட்டு அகத்திய மாமுனிவர் தனது கமண்டல கங்கை நீரை வழங்க இராமபிரான் தனது திருக்கரங்களால் ஈசனை நீராட்டி வழிபடுகிறார். அதற்கான புடைப்புச் சிற்பமும் , அகத்திய மாமுனிவரின் புடைப்புச் சிற்பமும் இவ்வாலயத்தில் விசேஷமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இராமபிரான் வருகையினால் வில்லேந்திக்குப்பம் என்ற பெயர் பெற்ற ஊர் நாளடைவில் பெயர் மருவி பில்லேந்திக்குப்பம் என அழைக்கப்படுகிறது. இந்த ஊர் ஏரிகாத்த இராமர் கோயில் கொண்ட மதுராந்தகம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளது.
இராமாயணத்திற்கும் இவ்வாலயம் உள்ள பகுதிக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. வேடர்களின் தலைவனான குகன் இராமபிரானுடன் நட்புறவு கொண்டு இராமபிரானின் நெருங்கிய நண்பனாக விளங்கியதால் தசரத புத்திரகளாகிய நாங்கள் குகனோடு ஐவரானோம் எனக்கூறி குகனை தன் சகோதரன் நிலைக்கு உயர்த்தி மகிழ்ந்தவர் இராமபிரான். பாரத தேசத்தில் வேட்டுவர்கள் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பகுதியில் வேட்டுவர்களாகிய மக்கள் வாழ்ந்து வந்த இடம் தற்போது வேடந்தாங்கல் எனவும் , வேடவாக்கம் எனவும் வழங்கப்படுகிறது. இவ்வூரில் முன்பு பட்டு நெசவுத்தொழில் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. அதன் காரணமாக இவ்வூரின் பெயர் நாளடைவில் புதுப்பட்டு என மருவி இருக்கும் என கருதப்படுகிறது .
கட்டிடக்கலை
கோவிலினுடைய காலம் இன்னமும் சரியாக கணிக்கப்படவில்லை. காஞ்சியில் உள்ள கற்கோவில்களுடன் ஒப்புமைபடுத்தியும், கோவிலின் கட்டமைப்பை வைத்தும் முதலாம் நரசிம்ம பல்லவர் காலத்தில் ( கி.பி 630 - 668 ) இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இத்திருக்கோயில் பல்லவர் கால கோவில் கட்டிடகலையை கொண்டுள்ளது. நுழையும் போதே முதலில் தாயாரை வணங்கிவிட்டு தான் சிவனை வழிபட முடியும் என்பது பல்லவர்கால கட்டிட கலைக்கு சான்றாக உள்ளது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் , புதுப்பட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோவில், கிணார் நேத்ராலேயேஸ்வரர் கோவில் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதோஷங்கள்
சிவராத்திரி
இராம நவமி
புரட்டாசி சனிக்கிழமை